Aruvi Serial 30 Dec 2021 Episode 65 Review

வணக்கம் நண்பர்களே..!! இன்று அருவி சீரியலில் என்ன நடந்தது அதை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம். ரொம்பவே விறுவிறுப்பாக இருந்தது சரி வாங்க பார்க்கலாம்.

புகழின் பயம்:

கோபால் அருவி அப்பாவிடம் புகழை பற்றி சொல்கிறார் அதற்க்கு அருவி அப்பா கோபால் என்ன குடிச்சுட்டு வந்து அதையே சொல்லிட்டு இருக்க, அதற்க்கு கோபால் குடிகாரன் உண்மையே சொல்ல மாட்டானா என்ன அண்ணா உங்க லாஜிக் ந சொல்றத நீங்களே நம்பலான என்ன யாருன்னு நம்புவாங்க சொல்லிட்டு கோபால் அங்கிருந்து கெளம்பி விடுகிறார்.

அருவி அப்பா கோபால் போகாத நில்லு சொல்கிறார், கடைசியில் அருவி அவங்க அப்பா சரி நீ சொல்றத நா நம்புறேன் இங்க வா சொல்கிறார், கோபால் அருவி அப்பாவிடம் உண்மையை சொல்கிறார் அன்னே இவனைபத்தி தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் மாப்பிள்ளை பிரின்ட் புகள்னு தெரியாதவங்க கிட்ட எல்லாம் மாப்ள திருனு மாத்தி மாத்தி நடிச்சுட்டு இருக்கான் அன்னே.

அருவி அவங்க அப்பா புகழை ஆக்ரோஷத்துடன் பார்க்கிறார், இது என் பொண்டாட்டி கலா மேல சாத்தியமா அன்னே அதையே மாதிரி அவனையும் சத்தியம் பண்ணி உண்மைய சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் என்று கோபால் சொல்கிறார்.

அருவி அப்பா: சொல்லுங்க புகழ், என் தம்பி கோபால் சொல்றது எல்லாம் உண்மையா.

புகழ்: இல்ல பிரண்ட். அது வந்து…

அருவி அப்பா: இப்போ உண்மைய சொல்ல போறிங்களா இல்லையா…புகழ்: உங்களையே நம்பிட்டு இருக்க எங்க எல்லாரையும் ஏமாத்த போறிங்களா நீங்க.. தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க…

உடனே அருவி அப்பா புகழை பார்த்து கண்ணடிக்குறாரு, இதெல்லாம் சும்மா கோபாலை சமாளிக்க தான் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…இல்ல இதெல்லாம் கேட்ட நீ உண்மைய சொல்ல மாட்ட போலீஸ்கு கால் பண்ணி வர வேக்கிரேன் இரு சொல்லிட்டு அருவி அப்பா கோபாலை கூட்டிட்டு போகிறார். கோபாலை ரூமில் கூட்டிட்டு போய் விட்டுவிட்டு வருகிறார்.

அருவி அப்பா புகலிடம் சாரி பிரின்ட் கோபால் பேசுனதை எதையும் மனசுல வெச்சுக்காதிங்க.. சொல்லிட்டு போய் விடுகிறார்.

மேலும் படிக்க:Aruvi serial today episode 76 | 13 Jan 2022

புகழை எதிர்பார்க்கும் சரஸ்வதி:

புகழை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள், குறிப்பாக வெண்ணிலா தீவிரமாக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறாள். காரில் ஈஸ்வரனும் களையும் வந்து இறங்குகிறார்கள், வெண்ணிலா ஓடி போய் ஈஸ்வரனிடம் புகழ் மாமா எங்க என்று கேட்கிறாள், கலையையும் பார்த்து எங்க புகழ் மாமா என்று கேட்கிறாள் யாரும் எதுவும் சொல்லாமல் இருக்கின்றனர்.

சரஸ்வதி கேட்கிறார், என்னடா ஆச்சு…

ஈஸ்வரன்: அம்மா, ஜோ வீட்டுக்கு போகுனே மா, ஜோ அங்க இல்ல அவங்க அம்மாவை கேட்டதுக்கு அவன் எங்க போயிருக்கான் தெரியாது சொல்லிட்டாங்க ஆனா ஒன்னு மட்டும் சொன்னாங்க மா ஜோ எப்போமே புகளோட தான் சுத்தறானு கம்பளைண்ட் பண்ணாங்க மா..

சரஸ்வதி: அதனால அப்படியே வந்துட்டீங்களா

ஈஸ்வரன்: அது எப்படி மா வருவோம் பக்கத்துல ஒரு ரெண்டு மூணு கல்யாண மண்டபத்தை பார்த்தோம் மா அது மட்டும் இல்லாம ரெஸ்டாரண்ட் தேட்டர்ஸ் இன்னும் சொல்ல போன கோயில கூட பார்த்து வந்துட்டோம் மா எங்கயும் புகழ் இல்ல..

புகழ் அப்பா: போன் நம்பராசும் வாங்குனீங்களா

கலை: கெடச்சுதுங்க அப்பா, பட் அவனுக்கு ட்ரை பண்ண அவன் பிக் பண்ணவே மாட்டிங்குறான். இப்போ வரைக்கும் ட்ரை பண்ணிகிட்டயே தான் இருக்கோம்.

உடனே நீலவேணி தன் அம்மாவிடம் பாரு மா எல்லாரும் ஒரு பிளான் ஓட தான் போயிருக்காங்கனு அழுது கிட்டே சொல்கிறார், எதுக்காக இந்த திட்டம் அவங்க என்னதான் பண்ண போறாங்கன்னு தெரியல அதற்கு வெண்ணிலா இனிமே என்ன பண்ணா என்னம்மா எல்லாம் போச்சுமா மொதல்ல என் லைஃப் குட்டிச்சோரா ஆக்கிட்டாங்க எல்லாம் போச்சு என்று சொல்லிகிட்டே அழுகிறாள். சரஸ்வதி உடனே வெண்ணிலாவை ஏதோ சொல்லி சமாதானம் படுத்துகிறார்.

திருவிற்கு கால் செய்யும் புகழ்:

புகழ் அவங்க நண்பர்கள் எல்லாம் கோபாலை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள் அதில் ஒருத்தன் இன்னிக்கி நடக்க போற அணூ குண்டுக்கு அவன் தான் திரிய பத்த வெக்க போறான் நெனச்சன் எப்டியோ தப்பிச்சிட்டோம் அதற்க்கு புகழ் இப்ப தப்பிச்சது நிரந்தரம் இல்லடா கூடிய சீக்கிரம் அவனாலேயே மாட்றதுக்கு 100% சான்ஸ் இருக்கு அதுக்குள்ள திருவும் ஸ்வப்னாவும் வந்துட்டாங்கன்னா பிரச்னை இல்ல புகழ் நண்பன் ஒருத்தன் டேய் அவனுக்கு போன் ஆஹ் போட்றா மச்சா இங்க இருக்குற திருத்தணில இருந்து வர இவ்ளோ நேரமா சொல்கிறான் அதுக்கு ஜோ, மச்சா நா தான் அப்போவே சொன்னாலே மச்சா இந்த நேரத்துக்கு ரொமான்ஸ் மூடுக்கு போயிருப்பான்னு….

புகழ் திருவிற்கு கால் பண்ணுகிறான் திரு புகழ் காலை அட்டென்ட் பண்ணி பேசுகிறான்..

திரு: ஹலோ…

புகழ்: டேய் எங்கடா இருக்க சென்னை ரீச் ஆகிடியா டா…

திரு: இன்னும் இல்ல டா

புகழ்: ஏண்டா இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க

திரு: வர வழில போலீஸ் மடக்கி விட மாட்றாங்க டா, யாரோ எக்ஸ் மினிஸ்டர் பொண்ண கூட்டிட்டு பொய் கல்யாணம் பண்ணி கிட்டானா எங்களை பார்த்து சந்தைக பட்டு இன்ஸ்பெக்டர் வந்தா தான் விட முடியும் சொல்லிட்டாங்க டா..

புகழ்: என்னடா நீ ஏதோ ஏதோ சொல்லிட்டு இருக்க

திரு: டேய் இப்படிலாம் நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர் பாக்கல டா..நானும் ஸ்வப்னாவும் எவ்ளவோ கெஞ்சு பார்த்துட்டோம் விடவே மாட்றாங்க டா

புகழ்: டேய் நீ வந்ததுக்கு அப்புறம் தான் அருவி கிட்டே உண்மைய சொல்ல முடியும் டா…ஆனா சம்மந்தமே இல்லாம டைம் ஆயிட்டு இருக்கே டா…

திரு: மச்சா நீ ஒன்னும் கவலைப்படாத இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்லிட்டு எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துறேன்..

கோபத்துடன் வரும் அருவி:

அருவி கோபத்துடன் வருகிறாள் வந்து புகழை முறைத்து பார்க்கிறாள் புகழ் கையை பிடித்து தன்னுடைய மணமகள் அறைக்குள் கூட்டிட்டு போகிறாள் அங்கு போய் புகளிற்கு டிரஸ் கொடுக்கிறாள் புகழ் ட்ரெஸ்ஸை வாங்கி கொண்டு போகிறார்.

மணமேடையில் அருவியும் புகழும் மற்றும் அருவி தோழியும் இருக்கின்றனர் மேடையில் புகழ் நண்பர்களும் வந்துவிட்டனர்.
அருவி மாஸ்டரிடம் இந்த மாதிரி எந்த மேரேஜ் கப்புள்சும் இப்படி ஒரு போட்டோஷூட் எடுத்திருக்க கூடாது அப்டி எடுத்து அசத்திடனும் சொல்கிறாள்.

புகழ் ஒரு பக்கம் நண்பர்களிடம் பேசுகிறார், மச்சா எதுக்கோ நீங்க வெளிய போய் நில்லுங்க திரு அம்மா அப்பாவோ அருவி அப்பாவோ வந்தா விசில் அடிங்க நா இங்க இருந்து எஸ்கேப் ஆகிடுறேன். அதற்க்கு ஜோ சரி மச்சா நீ டென்ஷன் ஆகாத கூலா போட்டோஷூட்ல கலந்துக்கோ இந்த மாதிரி ஆபர்ச்சுனிடி ஒரு டைம் தான்டா கிடைக்கும் சொல்லிட்டு போகிறார்கள்.

அருவியும் புகழும் போட்டோஷூட் எடுத்துட்டு இருக்கிறார்கள் அதை பார்த்து ஒருவர் ரசித்து கொண்டு இருக்கிறார் திடிர்னு எழுந்து போய் அருவி அப்பாவிடம் சொல்கிறார், விஸ்வநாதா உள்ள பொன்னையும் மாப்பிள்ளையும் போட்டோ புடிச்சிட்டு இருக்காங்க ஜோடி பொருத்தத்தை என்னனு சொல்றது பரமேஸ்வரன் பார்வதினு சொல்றத இல்ல பெருமாள் லட்சுமின்னு சொல்றதா என்ன சொல்றதுனே தெரியல பொண்ணு மாப்பிள்ளை ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கு அதற்க்கு அருவி அப்பா நீங்க சொல்றத கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி அப்போ போய் பாருங்க சொல்லிட்டு கெளம்பிடுகிறார்.

அருவி அவங்க அப்பா வருவதை பார்த்து புகழ் நண்பர்கள் விசில் அடித்து கொண்டிருக்கின்றனர் விசில் சத்தம் கேட்டதும் புகழ் ஓட முயற்சிக்குறார் கூலர்ஸ் போட்டால் நல்ல இருக்குப்பா ஒருத்தர் சொல்கிறார் புகழ் அதை வைத்து அருவிடம் கூலர்ஸ் ரூம்ல இருக்கு அதை போய் எடுத்துட்டு வந்துட்றன் சொல்லிட்டு போகிறார்..

புகழ் நண்பர்கள் வந்து சிஸ்டர் எங்க கூடலாம் போட்டோ எடுக்க மாட்டிங்களா வாங்க உக்காருங்க போட்டோ எதுத்துக்கலாம் சொல்லிட்டு போட்டோ எடுக்கிறார்கள் புகழ் பயந்து மாடியில் ஏறி வருகிறார். ஜோ அங்குள்ஸ் வாங்க எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாம் அருவி அப்பா மாப்பிள்ளை எங்க கேட்கிறார் அதற்க்கு அருவி ரூம்ல இருந்து கூலர்ஸ் எடுத்துட்டு வர போயிருக்காரு பா சொல்கிறாள் திரு அப்பா எங்க இருக்கான் கண்லயே பட மாட்டிங்குறானே சொல்கிறார், அதற்க்கு ஜோ அங்குள் நீங்க தான் காலைல பார்த்திங்களா அவன் கூலர்ஸ் எடுக்க போயிருக்கான் அவ்ளோதான் சொல்கிறார் எல்லாரும் போட்டோ எடுத்து கொள்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் வருகிறார் வந்த உடன் திருவையும் ஸ்வப்னாவையும் பார்த்துவிட்டு இவங்க இல்லை சொல்லி வண்டி சாவியை கொடுத்து போக சொல்கிறார், திரு ஸ்வப்னாவை கூட்டிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பயத்தில் சரஸ்வதி:

புகழ் அப்பா சரஸ்வதியிடம் என்னமா நீயே எல்லாருக்கும் நம்பிக்கை கொடுத்துட்டு எப்படி உட்கார்ந்துட்டு இருக்க அதற்க்கு சரஸ்வதி நம்பிக்கை கொடுத்தேன் தான் ஆனா உள்ளுக்குள்ள மனசு ஆட்டங்கட்டு போயிருக்கு என்ன சுத்தி என்ன தான் நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல ஒருவேளை அந்த சித்தர் சொன்ன மாதிரி நடந்துட்டு இருக்கோனு உணர்த்துது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் அத்துடன் இந்த சீரியல் முடிகிறது.

மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திப்போம் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.