Kannana kanne serial today episode 360 | 01 Jan 2022

கௌதம் தன் மகள் மீரா பிறந்த நாளிலேயே தன் அன்பு மனைவியையும், அபரிமிதமான செல்வத்தையும் இழந்ததற்கு அவள் பொறுப்பாளியாக இருந்ததால் அவளை வெறுக்கிறான். தன் வாழ்க்கையின் அன்பான யுவாவை திருமணம் செய்து கொண்டாலும், மீரா தன் தந்தையின் அன்பை வெல்ல விரும்புகிறாள்.

அப்பாவை காப்பாற்ற துடிக்கும் மீரா:

தன் அப்பாவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையை தேடி ஓடி வருகிறாள் மீரா அங்கு வந்து டாக்டர் இருக்காரா கேட்கிறார் அதற்க்கு அவர் இருக்காருமா உள்ள பேஷண்ட் பார்த்துட்டு இருக்காரு சொல்கிறார் அதற்க்கு மீரா சார் ரொம்ப அவசரம் எங்க அப்பாவுக்கு ரொம்ப முடில நா டாக்டரை உடனே பாக்கணும் சொல்கிறார் அதற்கு அவர் உடனே நா எப்படி மா முடியும் எல்லாருக்குமே இங்க எமர்ஜெண்சி தான் அப்பாயின்மென்ட் வாங்கிருக்கிங்களா அதற்க்கு மீரா இல்ல சார் அப்பாவுக்கு திடிர் நெஞ்சுவலி வந்துருச்சு அவர் வழில துடிச்சிட்டு இருக்காரு டாக்டர் உடனே கூட்டிட்டு போகணும் சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க அதற்க்கு அவர் ஏம்மா எமர்ஜெண்சி சொல்ற பாஷாண்டஹ் ஆட்டோலையோ இல்ல கால்டாக்சிலேயோ கூட்டிட்டு வந்துருக்கலாம்ல அவசரத்துக்கு ஆட்டோ கிடைக்கல சார் சொல்கிறார் மீரா இப்டியே இரண்டு பேருக்கும் வாக்குவாதம் போயிட்டு இருக்கு…

திடிர்னு மீரா டாக்டரை பார்க்க உள்ள ஓடுகிறார், டாக்டர் யாருமா நீ கேட்கிறார் நீ பாட்டுக்கு உள்ள வர சொல்கிறார் டாக்டர் தப்பா எடுத்துக்காதீங்க எங்க அப்பாக்கு திடிர்னு நெஞ்சுவலி வந்துருச்சு அவரு வலில துடிச்சிட்டு இருக்காரு அவரை எப்படியாச்சும் வந்து காப்பாத்துங்க டாக்டர் ப்ளீஸ்…எங்க அப்பாவுக்கு ஏதாச்சும் ஆயிடுமோனு பயம்மா இருக்கு என்கூட கொஞ்சம் வந்து பாருங்க டாக்டர் சொல்கிறாள் அதற்க்கு டாக்டர் அப்டி ஒடனே வரமுடியாதுமா பேஷண்ட்ஸ் நெறய பேர் இருக்காங்க அவங்கள பாக்கணும்ல சொல்கிறார் ஆனால் மீரா விடவில்லை எங்க அப்பாவை எப்படியாச்சும் காப்பாத்துங்க சொல்கிறார் காலில் விழுகிறார் கடைசியில் டாக்டர் வரேன் சொல்லிவிட்டார்.

டாக்டர் கவ்த்தமை பார்க்கிறார்:

மீரா டாக்டரிடம் பாருங்க டாக்டர் சொல்கிறார் அதற்க்கு டாக்டர் பாக்குறேன் மா ஒரு வேல ஹார்ட் அட்டாக் இருந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும் சொல்கிறார் டாக்டர் செக் பண்ணுகிறார் ஒரு ஊசி போட்டுவிட்டு பயப்படுற மாதிரி எதுவும் இல்லமா பிரஷர் அதிகமா ஆயருக்கு அதனால தான் செஸ்ட் பைன் வந்துருக்கு ஓவர் பிரஷர் ஆச்சுன்னா இப்படி ஆகும் யமுனா அவருக்கு வலி கொறஞ்சுரும்ல கேட்கிறார் அதற்க்கு டாக்டர் பிரஷர் கொறஞ்சதும் வலி கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சிடும் அதுக்காக தான இன்ஜெக்ஷன் போட்ருக்கேன் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாரு டாக்டர் சொல்கிறார்.

கவ்தம் கண்ணு திறக்கிறார் எழுந்து உட்காருகிறார் டாக்டர் கவ்த்தமிடம் இப்ப பைன் எப்படி இருக்குனு கேட்கிறார் கெளதம் பரவா இல்ல டாக்டர் சொல்கிறார் ரெண்டு கையும் மேல தூக்குங்க டாக்டர் சொல்கிறார் கவ்தம் தூக்குகிறார் இனிமே பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லமா பிரஷர் கொறஞ்சிடுச்சு பிரஷர் அதிகமா ஆனது நால தான் இப்படி ஆயருக்கு சொல்கிறார்.வீட்டுல ஏதோ ப்ரோப்லேம் இவங்க சொன்னாங்க அதுனால எதுவும் சாப்பிடாம மனச போட்டு வருத்திருப்பாரு பிரஷர் இன்னும் அதிகமா ஆயிருந்த ஹார்ட் அட்டாக் வந்துருக்கும் உங்க பொண்ணு சரியான நேரத்துல என்ன கூட்டிட்டு வந்து இவரை காப்பாத்திட்டாங்க மிஸ்டர் கெளதம் உங்கள காப்பாத்துனது உங்க பொண்ணு தான் உங்க பொண்ணு என் கிளினிக் வந்தப்ப நா ரொம்ப பிஸியா இருந்தேன் என் கால விழுந்து கெஞ்சுனாங்க அதனால தான் நா வந்தேன் கொஞ்சம் லேட்டா ஆயிருந்தக்கூட பிரஷர் அதிகமா ஆகி சீரியஸ் கண்டிஷன்க்கு போயிருப்பிங்க சொல்கிறார். டாக்டர் அங்கிருந்து கெளம்பி விடுகிறார் மீரா நா டாக்டர் அனுப்பிவச்சுட்டு மாத்திரை வாங்கிட்டு வரேன் சொல்லிட்டு போகிறார்.

யுவா வீட்டிற்கு வருகிறார்:

யமுனா யுவாவை பார்த்து யுவா இவ்ளோ நேரம் நீ எங்க போன கேட்கிறார் அதற்க்கு யுவா நாம வேற வீடு பாக்கணும்ல நம்ம பார்த்த சாரதி கிட்ட சொல்லி வீடு பாக்கலாம் போன மூணு வீடு இருக்கிறதா சொன்னாரு மீரா மாமா வீடு பாத்தியா ஓகே ஆயிடுச்சா கேட்கிறார் அதற்க்கு யுவா இல்ல மீரா நயிட் ஆய்டுச்சுல நாளைக்கு காலைல வீட்டை பாக்கலாம் சொன்னாங்க நாளைக்கு வீட்டை பார்த்து பிக்ஸ் பண்ணிடலாம் சொல்கிறார்.

அதுக்கு அப்புறம் என்னாச்சு ஏன் சார் டல்லா இருக்காரு யுவா கேட்கிறார் அப்பாவுக்கு பிரஷர் அதிகமா ஆகி நெஞ்சுவலி வந்துருச்சு என்னாச்சு அவருக்கு யுவா கேட்கிறார் அதற்க்கு யமுனா பயப்பட ஒன்னும் இல்ல யுவா மீரா ஓடிப்போய் டாக்டர் கூட்டிட்டு வந்து அவரை காப்பாத்திட்டா மீரா யுவாவை பார்த்து நீ ஏன் போன எடுக்காம போன கேட்கிறார் அதற்க்கு யுவா சாரி மீரா போற அவசரத்துல மொபைலை விட்டுட்டு போய்ட்டேன் மேனகா வீட்டை ஒடனே காலி பண்ணனும் சொன்னது நால அந்த டென்ஷன்ல கிளம்பிட்டேன் மீரா திரும்பவும் வீட்டை நாளைக்கு பேசி முடிச்சுறலாம்ல கேட்கிறார் அதற்க்கு யுவா பேசிடலாம் மீரா சொல்கிறார்.இப்படியே போய் கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க: Kannana Kanne Serial 29 Dec 2021 Episode 356 Review

வீட்டை பார்க்க காத்திருக்கின்றனர் யுவா மீரா:

பார்த்த சாரதி வருகிறார் வந்தவுடன் யுவா அவரிடம் ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்லிட்டீங்களா இன்னைக்கு வீட பார்த்துடலாம்ல அதற்க்கு பார்த்த சாரதி பார்த்துடலாம் சார் சொல்கிறார், அதுக்கு அப்புறம் பழைய கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் இப்டியே பேசிட்டு இருக்கும் போது யுவா பார்த்த சாரதி சார் எங்களுக்கு டைம் இல்ல இன்னைக்கு வீட்டை பார்த்தாகணும் சொல்கிறார் அதற்க்கு பார்த்த சாரதி உங்களுக்கு அபார்ட்மெண்ட் ஓகே வா கேட்கிறார் அதற்க்கு மீரா இல்ல அங்கிள் இண்டிஜுவல் ஹவுஸ் நா கொஞ்சம் comfortablela இருக்கும் மீரா சொல்கிறார் அதற்க்கு அவர் ஒன்னும் பிரச்னை இல்ல மா ரெண்டு மூணு வீடு பார்த்து வச்சுருக்கேன் உங்களுக்கு எந்த வீடு புடிச்சிருக்கினு சொல்லுங்க அதையே பேசி முடிச்சுறலாம் சொல்கிறார் அங்கிருந்து கெளம்புகின்றனர்.

ஹவுஸ் ஓனர் வந்தவுடன் யுவாவிடம் சொல்கிறார் மூணு பெட்ரூம் இருக்கு பெரிய ஹால் இருக்கு கிட்சன் இருக்கு கார் பார்க்கிங் இருக்கு பின்னாடி சின்னதா ஒரு கார்டானும் இருக்கு சோலார் இருக்கு மாடுலர் கிட்சன் இருக்கு 24 ஹவர்ஸ் வாட்டர் சப்ளை இருக்கும் சொல்கிறார் ரொம்ப டீசெண்டான ஏரியா மா முக்கியமா திருடங்க தொல்லை இருக்காது வீடு உங்களுக்கு தான கேட்கிறார் புதுசா கல்யாணம் ஆகிறுக்கா உங்களுக்கு அதற்க்கு யுவா சார் நாங்க பாமிலியோட தான் வரோம் அதற்க்கு ஹவுஸ் ஓனர் நீங்க எத்தனை பெரு வேணாலும் இருக்கலாம் ஆனா வாடகை கரெக்டா குடுத்துடனும் சொல்கிறார் ஐந்து லட்சம் அட்வான்ஸ் ஐம்பதாயிரம் வாடகை சொல்கிறார் அதற்க்கு மீரா அவ்ளோ வாடகைலாம் எங்களால சமாளிக்க முடியாது சொல்கிறார் அதற்க்கு ஹவுஸ் ஓனர் அப்டினா நீங்க வேற வீடு தான் மா பாக்கணும் சொல்லிட்டு போய் விடுகிறார்.

இரண்டு வீட்டிற்கு செல்கின்றனர்:

வேற வீடை பார்க்க போகிறார்கள் வீட்ல எல்லா வசதியும் இருக்கு ஆனா வாடகை ஒரு பைசா கூட குறைக்க மாட்டேன் இருபத்தைந்தாயிருபா வாடகை இரண்டரை லட்சம் அட்வான்ஸ் இன்னைக்கி அட்வான்ஸ் குடுத்துட்டு வீட்டுக்கு வந்துரலாம் வீட்டை பாத்திங்களா எல்லாருக்கும் புடிச்சு போய்டும் ராசியான வீடு சரி நா ஓகே இல்லனா வேற வீடு பாருங்க சொல்கிறார் ஹவுஸ் ஓனர் உங்களுக்கு ஓகே நா எனக்கு போன் பண்ணுங்க சொல்லிட்டு கெளம்பி விடுகிறார்.

இன்னொரு வீடை பார்க்க போகிறார்கள் பார்த்த சாரதி எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பாமிலி எனக்கு எப்படி குடுப்பீங்களோ அதையே மாதிரி அவங்களுக்கும் வீடு கொடுக்கணும் ஐயா சொல்கிறார் அதற்கு ஹவுஸ் ஓனர் மீரா உள்ள போய் பாக்கலாமா கேட்கிறார் வீட்டை போய் பார்க்கிறார்கள் யுவாவும் மீராவும் வீட்டை பார்க்கின்றனர் யுவா மீராவிடம் என்ன மீரா வீடு புடிச்சிருக்கா கேட்கிறார் அதற்க்கு மீரா வீடு பலசா இருந்தாலும் நல்லா இருக்கு மாமா சொல்கிறாள்.

யுவா ஹவுஸ் ஓனரிடம் சார் வாடகை எவ்வளவு கேட்கிறார் அதற்க்கு ஹவுஸ் ஓனர் மாசம் பத்தாயிரம் வாடகை பா ஒரு லட்சரூபா அட்வான்ஸ் மீரா சார் வாடகை கொஞ்சம் குறைக்க முடியுமா கேட்கிறார் அதற்கு அவர் பழைய வீடா இருந்தாலும் எவ்ளோ விடலாமா இருக்கு பாத்தியா அதற்கு மீரா வாடகை ஓகே அட்வான்ஸ் கொறைக்கலாம்ல சொல்கிறார் அதற்கு அவர் வாய்ப்பு இல்ல உங்களுக்கு ஓகே நா அட்வான்ஸ் குடுங்க இல்ல வேற ஆளு புக் பண்ணிடுவாங்க ஏற்கனவே ரெண்டு பெரு வீடு பாக்க வரேன்னு சொல்லிருக்காங்க இன்னைக்குள்ள அட்வான்ஸ் குடுக்கணும் இல்ல வேற ஆளு கிட்ட வீட்டை குடுத்துருவோம் சொல்கிறார்.

கடைசியில் அட்வான்ஸிற்கு தன் பைக்கை விற்கப்போகும் யுவா:

யுவா மீராவிடம் அமௌன்ட் கண்டிப்பா குறைக்க மாட்டாங்க இந்த வீட்டுக்கு இந்த வாடகை கம்மி தான் பார்த்த சாரதி சார்காக தான் நமக்கு கம்மியா குடுத்துருக்காங்க வீடு எனக்கு ஓகே உனக்கு ஓகே வா கன்போர்ம் பண்ணிடலாம் கேட்கிறார் அதற்க்கு மீரா மாமா வாடகை கூட சமாளிச்சுடலாம் ஆனா அட்வான்ஸ்கு என்ன பண்றது நம்மகிட்ட அட்வான்ஸ்கு ஐம்பதாயிரம் தான் இருக்கு பாலன்ஸ் அமௌண்ட்டிற்கு என்ன பண்றது கேட்கிறார் அதற்க்கு யுவா தன்னுடைய பைக்கை பார்க்கிறார்…இத்துடன் இந்த சீரியல் முடிவடைகிறது அடுத்த எபிசோடில் யுவா என்ன பண்ண போகிறார் என்பதை பொறுத்துஇருந்து பார்க்கலாம் நன்றி..!! வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.