Kannana Kanne Serial 29 Dec 2021 Episode 356 Review

எல்லாருக்கும் வணக்கம், கண்ணான கண்னே நாடகத்தில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது அதை பற்றி தான் பார்க்க போகிறோம். நேற்று பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது வாங்க பாக்கலாம்.

மேனகா ஆட்டம் ஆரம்பம்:

மேனகா கௌதமை பார்த்து ப்ரீத்தியை ந இங்கிருந்து கூட்டிட்டு போகணும்னா ஒரு கண்டிஷன் சொல்கிறாள், அதற்க்கு கெளதம் சொல்லு நா என்ன பண்ணனும் சொல்லு பண்றனே சொல்கிறார். கவுசல்யா குரூப் ஆப் கம்பனிஸ்ல இருந்து சம்பாதிச்ச அணைத்து சொத்தையும் சந்தோஷ் பெயரில் எழுதி வெக்கணும் மேனகா சொல்கிறாள். எல்லாரும் ஷாக் ஆகுறாங்க.

உன் பொண்ணு சந்தோஷ் கூட வாழணும்னா நா சொல்ற மாதிரி நீ பண்ணனும், சந்தோஷ் அத்தை நீங்க நெனச்ச மாதிரி கல்யாணம் நடந்துருச்சி எதுக்கு சொத்தை எல்லாம் கேட்குறீங்க சொல்கிறான். அதற்கு மேனகா கெளதம் சொத்து வந்தால் தான் ப்ரீத்தி உன்கூட வாழுவ இல்ல வாழ மாட்டா, நீ பேசுனா நீ கட்டின தாலிய வாங்கிட்டு உன்ன கையோட கூட்டிட்டு போய்டுவன் என்று சொல்கிறாள்.

ப்ரீத்தி அவங்க அப்பாவிடம் அழுதுகிட்டே வேணாம்பா சொத்தை குடுத்து தான் வாழனும் நா வேணாம்பா, எல்லாரும் சொத்தை எழுதி வெக்காத என்று சொல்கின்றனர். மேனகா கௌதமை பார்த்து ப்ரீத்தி சந்தோஷ் கூட வாழணும்னா சொத்து சந்தோஷ் பெயருக்கு மாறனும் சொல்கிறாள். சந்தோஷ் நீ கட்டுன தாலிய நீயே காலத்து சொல்கிறாள் மேனகா, கெளதம் வேண்டாம் என்று சொல்கிறார் சொத்து நா எழுதி தரேன் என்று சொல்கிறார்.

டாக்குமென்ஸ் ரெடி பண்ணிட்டு நானே உனக்கு கால் பன்றேன் என்று கெளதம் சொல்கிறார், அதற்க்கு மேனகா நானே டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணிட்டேன் நீ சைன் போட்டால் போதும் சொல்கிறாள்,எல்லாரும் ஷாக் ஆகுறாங்க…!!

மேலும் படிக்க:Kannana kanne serial today episode 370 | 17 Jan 2022

கையெழுத்து போட்ட கெளதம்:

சந்தோஷ் பாட்டி டாக்குமெண்ட்ஸ் எடுத்து வர போகிறார், ப்ரீத்தி அவங்க அப்பா தோல் மேல் சாய்ந்து கொண்டு அழுகிறாள். மேனகா டாக்குமெண்ட்ஸ் ஆஹ் வாங்கி கௌதமிடம் கொடுக்கிறாள், கெளதம் எல்லார் முகத்தையும் பார்க்கிறார். கடைசியில் எல்லா டாக்குமெண்ட்ளையும் கையெழுத்து போட்டுவிட்டார். எல்லாரும் அழுகிறார்கள், மேனகா நீ சைன் பண்ணிட்ட அப்படியே உன் பொன்னையும் சைன் பண்ண சொல்லு என்று சொல்கிறாள்.

கெளதம் மேனகாவை பார்த்து அவ எதுக்கு சைன் போடணும் கேட்கிறார், அதற்க்கு மேனகா கவுசல்யா குரூப் ஆப் கம்பனிஸ் எல்லா சொத்தையும் கவுசல்யா பெயர்ல தான வாங்கியிருக்க, சோ கவுசல்யா இல்லாதது நாலா கவுசல்யாவுடைய வாரிசு தாரர் நீயும் மீறவும் மட்டும் தான் உன் பங்குக்கு நீ எழுதி கொடுத்துட்டே மீரா பங்கிற்கு அவ எழுதி கொடுக்க வேண்டாம். அவ கிட்ட சைன் வாங்கு சொல்கிறாள் மேனகா.

கையெழுத்து போட்ட மீரா:

கெளதம் டாக்குமெண்ட்ஸை மீராவிடம் எடுத்துட்டு போகிறார், அதற்க்கு மீரா நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், நம்ப குடும்பத்தோட பெரிய சொத்து நா உயிருக்கு உயிராக நேசிக்குற ப்ரீத்தி தான், அவளையே தூக்கி குடுத்ததுக்கு அப்புறம் இந்த உயிர் இல்லாத சொத்தை குடுக்குறதுக்கு எதுக்குபா யோசிக்கணும், நா முழுமனசோட சைன் போட்டு தரேன், தாங்கப்பா சொல்லிட்டு மீரா எல்லா டாக்குமெண்ட்ஸ்ளையும் கையெழுத்து போடுகிறாள். எல்லாரும் அழுகிறார்கள், கெளதம் டாக்குமெண்ட்ஸ் எடுத்து மேனகா விடம் கொடுக்கிறார்.

மீராவை கட்டிப்பிடித்து அழுத ப்ரீத்தி:

ப்ரீத்தி அழுது கொன்டே மீராவை கட்டி பிடித்து அழுகிறாள், அக்கா நா உன்ன திட்டியும் நீ சொத்தை எழுதி குடுத்துருகியே உன் மனசு யாருக்கு வரும், அதற்கு மீரா நீ கண்கலங்காத அப்பாவையும், நம் குடும்பத்தையும் நா பார்த்துக்குரேன், நீ தைரியமா இரு சொல்கிறாள், ப்ரீத்தி அக்கா நீ சந்தோஷ பத்தி தப்பானவன் சொன்ன நா புரிஞ்சிக்கல என்ன மன்னிச்சிருக்கா…

மீரா ப்ரீத்திக்கு சொல்லும் அறிவுரை:

அதற்க்கு மீரா சந்தோஷ் உன்ன காதலிச்சது உண்மையா பொய்யா தெரியல ஆனா நீ சந்தோஷ காதலிச்சது உண்மை, உன்னோட காதல் உன்ன நல்ல வாழ வெக்கும், ப்ரீத்தி எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்கா, அழக்கூடாது ப்ரீத்தி நீ தைரியமா இருக்கணும், ஒரு ஆணுக்கு பொறந்ததுல இருந்து ஒரே வீடு தான் பொறந்த வீடு, அனால் ஒரு பொண்ணுக்கு அப்டி கிடையாது, பொறந்த வீடு புகுந்த வீடு எந்த கஷ்டத்துலையும் எந்த சூழ்நிலையும் வாழ தெரிஞ்சவ, வாழ துணிஞ்சவ தான், ஒரு பொண்ணு பயந்து நிக்கிறானா அங்க அவ மட்டும் தோதுபோல, அவ அப்பாவோட வளர்ப்பும் தோத்துபோது பயப்படக்கூடாது ப்ரீத்தி அப்பாவும் நானும் உன்கூடவே இருக்குறத நெனச்சிக்கோ, இதுதான் உன்னோட வாழ்க்கை, துணிச்சலோடு அத வாழ பழகிக்கோ.

யுவா சந்தோஷை பார்த்து சொல்கிறார், சந்தோஷ் நீ பண்ண தப்ப பத்தி தெரிஞ்சிருந்தும் கூட ப்ரீத்தி உன்ன ஏற்று கொண்டதிலிருந்ததே அவ உன்மேல எவ்வளவு அன்பு வெச்சுருக்கானு தெரியுது எந்த சூழ்நிலையும் தாய்வு செஞ்சி மனசு நூகுற மாதிரி பண்ணிடாத ப்ரீதியா கண் கலங்காம பார்த்துக்கோ, தப்பு பண்ண எல்லாருக்கும் தண்டனை குடுக்குற கடவுள் உனக்கு திருப்பி வாழ ஒரு சந்தர்ப்பத்தை குடுத்து இருக்காரு, திருந்தி வாழ பாரு…

அழுதது போதும் ப்ரீத்தி, தைரியமா இரு நம்ம குடும்ப அந்தஸ்து மட்டும் இல்ல உன்னையும் சேர்த்து இந்த சதிகாரங்க கிட்ட இருந்து மீட்பன். மீரா யுவா வை பார்த்து அப்பாவை கூட்டிட்டு வாங்க சொல்கிறாள்.

கௌதமை அழைத்து சென்ற யுவா:

யுவா கெளதம் தோல் மேல கைபோட்டு வாங்க சார் வாங்க சார், எல்லாரும் மண்டபத்தை விட்டு செல்கின்றனர். கடைசியில் மேனகா, சந்தோஷ், ப்ரீத்தி, சந்தோஷ் பாட்டி மட்டும் நின்றுகொண்டு இருக்கின்றனர். ப்ரீத்தி மட்டும் தனியாக அழுது கொண்டு இருக்கிறாள். சந்தோஷ் மேனகாவை பார்த்து சிரிக்குறான்.

கெளதம், மீரா, யமுனா, யுவா, கெளதம் அம்மா, இவங்க எல்லாரும் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டிருகிறார்கள். எல்லாம் ஒருவரைகோருவர் பார்த்து கொண்டிருக்கிறார்கள், மீரா பாட்டியை பார்த்து பீல் பண்ணாதீங்க பாட்டி சொல்கிறாள்.

கௌதமிற்கு கால் வருகிறது:

கௌதமிற்கு கால் வருகிறது, யுவா கெளதம் செல்போனை எடுத்து கௌதமிடம் கொடுக்கிறார், கெளதம் செல்போனை வாங்கிட்டு கால் அட்டென்ட் பண்ணி பேசுகிறார்.

அதில் ஒருவர் ஹே கெளதம் உன் டாட்டர்கு என்கிட்டே சொல்லாமலேயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டு என்கிட்டே அடுத்த மாசம் தான கல்யாணம் சொன்ன இப்பவே கல்யாணம் முடிஞ்சிருச்சாமே என்கிட்டே ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல எனிவெ கங்கிராட்ஸ் டா உன் பிசினஸ் போட்டியா இருந்த மேனகாவையே சம்மந்தியாக்கிட்ட, கிரேட் மூ கெளதம், அதற்கு கெளதம் அது நா டைடா இருக்கானே அப்புறம் பேசட்டுமா என்று சொல்லி காலைவைத்து விட்டார்.

திரும்பவும் இன்னொரு கால் வருகிறது, கெளதம் காலை அட்டென்ட் பண்ணி பேசுகிறார், ஹலோ நா கேள்வி பட்டது எல்லாம் உண்மையா உன் டாட்டர் கல்யாணத்த காரண காட்டி மேனகா எல்லாத்தையும் உன்கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டாளாமே, என்ன கெளதம் என்ன சைலண்டாஹ் இருக்க மேனகா ஒரு பரோபர்ட்டி ஹக்கேர் எல்லாரையும் அடிச்சு வாங்கியிருக்க உனக்கும் நடைதிருக்கான அத ஈஸியா எடுத்துக்க முடியாது எனக்கு தெரிஞ்சு சுப்ரீம் கோர்ட் லாயர் இருக்காரு அவர் கிட்ட சொல்லி அவளை உண்டு இல்லனு பண்ணிட்றேன், நீ ஓகே சொன்ன உடனே லாயிர பொய் பாக்கலாம்.

அதற்க்கு கெளதம் வேண்டாம், என் சொத்தலாம் மேனகா அடிச்சு புடுங்கள என் டாட்டர்க்காக நானே தான் சீதனமா எழுதி குடுத்துருக்கேன் என்று சொல்கிறார், எல்லாரும் கௌதமை பார்க்கிறார்கள், என்ன சொல்ற கெளதம் நீ தான் எழுதி குடுத்திய அன்பிலிவபல் என்னதான் பொண்ணு மேல அவ்வளவு பாசம் இருந்தாலும் மொத்த சொத்தையும் யாருன்னா எழுதி குடுப்பாங்களா அதும் மண்டபத்துல வெச்சு என்ன முட்டாள்தனமா இருக்கே, கெளதம் உடனே நா அப்புறம் பேசுறேன் சொல்லிட்டு பேசிட்டு இருக்கும் போதே கட்பண்ணி விடுகிறார்.

கெளதம் அவங்க அம்மா கௌதமை பார்த்து யாரு கெளதம் போன்ல உன்னோட பிரண்ட்ஸ்கலா என்று கேட்கிறாங்க என்ன சொன்னாங்க சொல்லு கெளதம் என்ன சொன்னாங்க, நீ பண்ணது சரினு சொன்னார்களா உலகத்துலயே இப்படி ஒரு அப்பா இப்படி ஒரு முட்டாள்தனத்தை பண்ணது இல்ல நீ பண்ணிருக்க அத சரினு சொன்னார்களா, அப்புறம் நீ அவங்க வாய அடைக்கலாம் கெளதம் ஆனா ஊர் வாய அடைக்கவே முடியாது, கல்யாணம்ங்குற பெயர்ல உன் பொண்ணுக்கு நீ எவ்ளோ பெரிய கெடுதல் பண்ணிருக்க தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு கெளதம் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்தது.

நாளைய எபிசோடில் என்னமாதிரி சீன்ஸ் நடக்க போது அப்டிங்குறத பொறுத்து இருந்து பார்க்கலாம், இதுக்கு அப்புறம் கொஞ்சம் விறுவிறுப்பாக போகும் நினைக்குறேன். தொடர்ந்து நம்முடன் இணைந்திருங்கள்… நன்றி…!! வணக்கம்….!!

 

Leave a Reply

Your email address will not be published.